ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,குறுக்குச்சாலை ஊராட்சி,கக்கரம்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.-14-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V.மார்கண்டேயன் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தாந்தர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ் குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகையா முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த் சென்னை சோலையப்பன் கிளைச் செயலாளர்கள் வேல்முருகன், முருகேசன்,பெருமாள் ஊர் நாட்டாமை பாலமுருகன், முருகராஜ் ஒப்பந்தகாரர் ராஜன் உட்பட கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



