மதுரை பிப்ரவரி 28,
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடிய விடிய நடந்த போராட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு பூஜைக்கு இரவு பழனியாண்டவர் திருக்கோவில் வழியாக பாஜக மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட 7 பேர் சென்ற போது அவருக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் அனுமதி அளிக்கும் வரை திரும்பி செல்ல போவதில்லை என கூறி தர்ணாவில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் காலை 6 மணியளவில் மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் விடிய விடிய போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.