தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்.
மதுரை பிப் 21 மதுரை
தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்ககத்தின் நாட்டு நலப்பணித் திட்ட மும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில்
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
20.02.2025 முதல் 26.02.2025 வரை 6 நாட்கள் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடைபெறுகிறது.
.
முகாமில் கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, தெலுங்கானா, ராஜஸ்தான், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள் பங்கேற்றன. இதில் அண்ணாபல்கலைக்கழகம் பாரதியார், பாரதிதாசன், சென்னை, காந்திகிராமம் போன்ற 19 பல்கலைக்கழகம் பங்கேற்றனர். தொடக்க விழாவில் இந்தியாவின் தென் மண்டல நாட்டு நலப்பணித்
திட்ட இயக்குநர் முனைவர் சாமுவேல் செல்லையா, தலைமை உரையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேசிய ஒருமைப்பாட்டில் ஆக்கப்பூர்மாக ஒற்றுமையுடன் செயலபடவேண்டும் என்றார். மதுரை காமராசர் பல்கலைகழக கன்வினர் குழு முனைவர் மயில்வாகனன் பாரதியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அண்ணாத்துரை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெள்ளியப்பன், பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ், சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை
திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாண்டி மேற்பார்வையில் சிறப்பாக செய்திருந்தனர்