நவ. 27
தமிழ்நாடு முதலமைச்சர்
.மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2024) சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக சுற்றுலாத்துறையின் சார்பில் திருப்பூர் தெற்கு வட்டம், ஆண்டிபாளையம் ஏரியில் படகு சவாரி, நீர் விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் மேம்பாட்டு செய்யப்பட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் .தா.கிறிஸ்துராஜ் , மாநகர காவல் ஆணையாளர் திருமதி லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருந்தாலும்,
திருப்பூர் மாநகர பகுதி மக்களுக்கு என்று பொழுதுபோக்கு தளம்
ஏற்படுத்தவும், திருப்பூர் மக்களின் நன்மை கருதியும், திருப்பூர் மாநகர
பகுதியில் 58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆண்டிப்பாளையம் ஏரியில்
சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுற்றுலா
வளர்ச்சி கழகம் சார்பாக ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் முடிவுற்று
இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து
வைக்கப்பட்டது. இந்த சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக படகு சவாரி, நீர்விளையாட்டுகள் மற்றும் பார்வையாளர் மாடம், 13 படகுகளுடன் கூடிய படகு இல்லம், சிறுவர் பூங்கா, உணவகம், குயிக் பைட்ஸ் (சிற்றுண்டி கடை), டிக்கெட் கொடுக்கும் மையம், குடிநீர் வசதிகள், மின்விளக்குகள் மற்றும் கழிவறை வசதிகள், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று தற்போது சுற்றுலாத்தலமாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர பகுதி மக்களின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு தளமாக ஆண்டிப்பாளையம் ஏரி அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் போது, மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி , துணை மேயர் பாலசுப்பரமணியம், திருப்பூர் மாநகராட்சி மண்டத்தலைவர்கள் இல.பத்மநாபன் (4-ம் மண்டலம்), கோவிந்தராஜ் (2-ம் மண்டலம்), திருமதி உமாமகேஸ்வரி (1-ம் மண்டலம்), சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் அ.செ.பழனிச்சாமி, மண்டல மேலாளர் (சுற்றுலா வளர்ச்சிக்கழகம்) குணேஸ்வரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், சுற்றுலா சங்க நிர்வாகிகள் குளோபல் பூபதி, சத்யம் பாபு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.