நாகர்கோவில் – நவ- 04,
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சியில்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட சுகாதாரதுறை சார்பில் புத்தளம் பேரூராட்சி சொத்தவிளை பீச் முதல் பள்ளம் துறை வரை நடப்போம் நலம்பெறுவோம் , நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் புத்தளம் பேரூராட்சி துணைத்தலைவர் பால்தங்கம் மற்றும் கவுன்சிலர்கள் வழக்கறிஞர் . ஜெகநாதன் , சிவகந்தன் முருகன் , விஜயன் , தனலிங்கவல்லி , விஜயகல்யாணி மற்றும் மருத்துவர்கள் ,சுகாதாரபணியாளர்கள் ,பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சிஒன்றியத்துணை பெருந்தலைவர் .செ.சரவணன் ,காவல்துறை உதவி ஆய்வாளர் திலீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்