தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.ரகுபதி அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் எம்.எம்.அப்துல்லா, துரை வைகோ, செல்வி.எஸ்.ஜோதிமணி, மரு.வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை. எஸ்.டி.ராமச்சந்திரன், தாட்கோ தலைவர் நா.இளையராஜா. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் கூடுதல் செயலாளர் ஆர்.வி.ஷஜீவனா மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மேயர் திலகவதி செந்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



