கிருஷ்ணகிரியில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சுதர்சனன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து முதியோர்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி கொண்டாடினார். முதியோர்களை ஊக்குவிக்கும் வகையில், “நான் எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு சேவிக்க இருக்கிறன்” என்று நம்பிக்கை ஊட்டினார்.
முதியோர்களிடம், “எப்பொழுதும் மனமுடைந்து இருக்கக்கூடாது, முகத்தில் புன்னகையுடன் இருக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். சுதர்சனன் சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படித்து வருகிறார்.
அவர் கூறியதாவது, “என் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால்,மேலும் மேலும் சமூக சேவையில் ஈடுபட ஆர்வம் அதிகரிக்கிறது.சுதர்சனன்” 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை அவர் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.