கருங்கல், மே .30 –
கிள்ளியூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது . தமிழக முதலமைச்சரால் காணொளி மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சி விவசாயிகளுக்கு ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்டது. வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் கீழ்குளம் கோபால் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் முரளி ராகிணி மன்வள மேம்பாடு தரமான விதை மற்றும் விதை நேர்த்தி குறித்த தொழில்நுட்ப உரையாற்றினார். வேளாண்மை அலுவலர் சஜிதா உளுந்து பயிரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார். விவசாயிகளுக்கு மண்வள அட்டை உளுந்து போன்ற இடுபொருள்கள் கையேடுகள் விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி கால்நடை மருத்துவர் மகேஸ்வரன் தோட்டக்கலை உதவி அலுவலர் ஜோவின் வேளாண் வணிக அலுவலர் சிவானந் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஷ்ணு. ரஜினி அபிஷா மற்றும் அட்மா திட்ட அலுவலர் ஜோசப் ஆக்னல் வட்டார விவசாய ஆலோசனை குழு உறுப்பினர் துரைராஜ் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.