வேலூர்_30
வேலூர் மாவட்டம் ,கே. வி. குப்பம் வட்டம், மேல் காவனூர் கிராமம் சிவன் படை வீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற உள்ள அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவினையொட்டி மங்கள இசை ,ஸ்ரீ கணபதி பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் ,மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் ,கோபுர கலச ஸ்தாபனம், யாத்ரா தானம் , , இதனை தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கு மஹாபிஷேகமும், தீபாராதனையும் , கரிகோலம் ஊர்வலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ,வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பருவதராஜகுல மரபினர்கள், மற்றும் மற்றும் விழா குழுவினர்கள் ஊர், பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.