நாகர்கோவில் ஏப் 2
குமரி மாவட்டகாவல்துறையின் சிறப்பான விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த ஆண்டை விட விபத்து உயிரிழப்புகள் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.இரா.ஸ்டாலின் விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை உருவாக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள்(Fatal Accident) நடந்துள்ளது.
2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 49 உயிரிழப்பு விபத்துக்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் குறைந்துள்ளது.
எடுக்கப்பட்ட விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,
விதிமீறலில் ஈடுபட்ட கனரக வாகனங்களின் மீது எடுக்கப்பட்ட தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகள்
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீதான நடவடிக்கைகள்
தலைக்கவசம் இன்றி பயணித்தவர்கள் மீதான நடவடிக்கைகள்,
18 வயதிற்க்கு கீழ் வாகனத்தை இயக்கிய சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு
சாலைகளில் அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கி Wheeling, Racing போன்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதான நடவடிக்கைகள்
அதிகமாக விபத்துக்கள் நடக்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த இடங்களில் விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக சென்டர் மீடியன் அமைத்தல், பேரிகார்ட் நிறுவுதல், மிளிரும் விளக்குகள் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது
மேலும் பள்ளிகள் கல்லூரிகளில் சாலை விபத்துக்கள் குறித்த எச்சரிக்கையும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வும் மாணவர்களிடம் ஏற்படுத்தப்பட்டது.
விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி என்ற மாவட்ட காவல் துறையின் குறிக்கோளை அடைய மாவட்ட காவல்துறை எடுக்கும் முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.