நாகர்கோவில் ஏப் 9
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை சமூக நலக்கூடத்தில் வைத்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் (ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவர் ) ஆகியோருக்கு உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் ஸ்டாலின் கலந்து கொண்ட அனைவரையும் பாராட்டி
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
இளைஞர்கள் தங்களுக்கு கிடைக்கப்பட்ட நேரத்தை வீணடிக்காமல் திட்டமிட்டு உதவி ஆய்வாளர் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்
இந்த வகுப்பில் அனைத்து பாடங்களுக்கும் தனித்தனியாக முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை வைத்து வகுப்புகள் நடத்தப்படும்
ஒவ்வொரு பாடங்களின் தலைப்புகள் முன்கூட்டியே கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலும், மொத்தமாகவும் 50 க்கும் மேற்ப்பட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்படும்
தேர்வுகள் எழுதி அதன் மதிப்பெண்களை வைத்து இளைஞர்கள் தங்களுக்குள்ள பலம் மற்றும் பலவீனத்தை ஆராய்ந்து, எந்த பாடத்தில் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதை கண்டறிந்து அந்த பாடத்தை முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்
தங்களுக்கான நேர அட்டவணையை கணக்கிட்டு அதை தங்கள் பார்வைக்கு தெரியும் வகையில் ஒட்டி வைத்து அதன் அடிப்படையில் நேரத்தை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்
நம்பிக்கையுடன் படித்தால் அனைவரும் உதவி ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெறலாம் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தார்.