நாகர்கோவில் மார்ச் 24
கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த நபரின் புல்லட் பைக் சிராயங்குழியில் வைத்து திருடப்பட்டதாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அவரின் உத்தரவின் படி மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லசிவம், மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் பெனடிக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் புல்லட்டை திருடி சென்றவனை தேடி வந்தனர்.
இந்நிலையில் புல்லட்டை திருடிய நபர் திருவனந்தபுரம் மாவட்டம் விழிஞ்ஞம், கோட்டுகால் பகுதியை சேர்ந்த செபாஸ்டின் என்பவரின் மகன் செல்சன்(20) எனவும் இவர் மீது கேரள காவல் நிலையங்களில் பதினைந்திற்க்கும் மேற்பட்ட புல்லட் திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட திருடனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.