கன்னியாகுமரி ஏப் 16
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
அன்றைய தினம் முதல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள அந்த பாலத்தை சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வந்தனர்.இந்தநிலையில் கண்ணாடி பாலத்தில் (செவ்வாய்க்கிழமை) நேற்று முதல் வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதன்படி கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் முன்னிலையில் நேற்று தொடங்கியது.
இந்த பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் 14 ம் தேதி மாலையுடன் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
பராமரிப்பு பணிகள் நடக்கும் 5 நாட்களும் கண்ணாடி பாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கண்ணாடி பாலத்தின் நுழைவு வாயிலில் கயிறுகள் கட்டி தடுப்பு கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பராமரிப்பு பணிகள் நடப்பது தொடர் பாகவும், அதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறித்த அறிவிப்பும் பாலத்தின் நுழைவு பகுதியில் வைக்கப்பட்டு இருக்கிறது.இதனால் சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு திருவள்ளுவர் சிலைக்கு கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.