நாகர்கோவில் செப் 24
குமரி மாவட்ட தலைமை
ரஜினி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆலோசனை கூட்டம்
நாகர்கோவில், வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளர் தங்கம் தலைமை வகித்தார்.நாகர்கோவில் மாநகர செயலாளர் நாஞ்சில் பி.எஸ்.ரஜினி செல்வம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10 ம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கவாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் திரைப்படத்தை காண வரும் ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து பணிகளும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதுபோல் பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாதவாரு கட்டவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் வஹாப், மாவட்ட துணை செயலாளர் கேசவன், நாகர்கோவில் மாநகர இணை செயலாளர் நடராஜன், முன்னாள் ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகிகள் மகாலிங்கம், பரமேஸ்வரன், முருகன், லாட்டரி மணிகண்டன்,
ஒன்றிய செயலாளர்கள் பழனி, சிவனேஸ்வரன்,
நாகர்கோவில் மாநகர துணை செயலாளர்கள் மீரா.ராஜா, சுரேஷ்,ராஜேஷ்,
தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் குமார்,
இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிவகுமார்,
மகளிர் அணி மாவட்ட செயலாளர் விஜி, குழித்துறை நகர செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திக், டேவிட்ராஜ், இளைஞர் அணி மாவட்ட இணைசெயலாளர் சோம சதீஸ்,
நாகர்கோவில் இளைஞர் அணி மாநகர செயலாளர் ரஜினிமணி, மற்றும்
கி.குமார், பாலன், சுதர்சன், ஜாக்சன், சிவகுமார், மணிகண்டன், விஜயகுமார், மகேஷ், புதுக்குடியிருப்பு சதீஸ், வடிவீஸ்வரம் மணிகண்டன், கிருஷ்ணகுமார் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகிகள், நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள்,
நகர நிர்வாகிகள், மற்றும் அனைத்து கிளை மன்ற நிர்வாகிகள், மற்றும் ரஜினி மன்ற ரசிகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.