குளச்சல் டிச 20
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், (பொறுப்பு) மேற்பார்வையில், குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சந்தணகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிதம்பர தாணு, சுரேஷ்குமார் மற்றும் காவலர்கள் மாலை நேரத்தில் குளச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்தி வாகனத்தை இயக்கிய 6 நபர்களை பிடித்து பிரீத் அனலைசர் கருவி மூலம் பரிசோதித்ததில் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185 ன் படி குடிபோதையில் வாகனத்தை இயக்குதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 60,000 ரூபாய் அபராத விதிக்கப்பட்டது.