கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் 9வது வார்டு பகுதியில் சிறுவன் பிள்ளையார் சிலை செய்தது காண்போரை நெகிழச் செய்தது. நாளை சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அழகர் என்பவரது மகன் வீரமணி வயது 8 களிமண்ணை எடுத்து தானே பிள்ளையார் சிலை செய்து அதற்கு வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளார். எட்டு வயதில் தன்னுடைய மூளையை பயன்படுத்தி விநாயகர் சிலை செய்யும் இந்த சிறுவன் செயலை பார்க்கும் பொழுது வருங்காலத்தில் மிகப்பெரிய சிற்பியாக வருவான் என்று பொதுமக்கள் புகழாரம் சூட்டினர்.இதனை கண்ட பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.