தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம்
கடை வீதியில் சுமார் கடந்த 9 வருடங்களாக மன அழுத்தத்தின் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டு அதிக முடியுடன் துர்நாற்றத்தில் அழுக்கு உடையுடன் அப்பகுதியில் உள்ள சாலையில் சுற்றி வந்த 47 வயது மதிக்கத்தக்க ஜாகிர் உசேன் என்பவர் சுற்றி திரிந்துள்ளார். அவரது மனைவி, மகன், மகள், மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அச்சத்தோடு இருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் பகுதியை சேர்ந்த பாரதி மோகன் அறக்கட்டளையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து மல்லிப்பட்டினம் கடைவீதிக்கு சென்ற அறக்கட்டளையின் நிறுவனர் சமூக ஆர்வலர் பாரதிமோகன் மற்றும் நண்பர்கள் அங்கு சாலையில் சுற்றி திரிந்த ஜாகிர் உசேனுக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்தும், புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி அவரது குடும்பத்திற்கு தெரியப்படுத்தி அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின் அறிவுரைகளை கூறி குடும்பத்தாரிடன் ஒப்படைத்தனர். மேலும் சமூக ஆர்வலர் பாரதிமோகனின் இச்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.