கிருஷ்ணகிரி, டிச. 9 –
கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள மருதேரி கிராமத்தில் உள்ள சரவணன் ஆசிரியர் என்பவரது தென்னந்தோப்பில் இன்று மதியம் பெண்கள் விவசாய பணிகள் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த முட்புதரில் புஸ் புஸ் என்ற சத்தம் வந்ததை அடுத்து அங்கிருந்த பெண்கள் சென்று பார்த்து போது புதரில் மலை பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு விளக்கை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள அவர்களிடம் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தா அதன் பேரில் சக்திவேல், சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்திற்கு வந்து புதரில் பதுங்கி இருந்த 10 அடி மலை பாம்பை தீயணைப்பு தளடவளங்களை கொண்டு லாவகமாக பிடித்து போச்சம்பள்ளி அருகே உள்ள தொகரபள்ளி காப்பு காட்டில் பத்திரமாக விடுவித்தனர். அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் பெருமூச்சு விட்டனர்.



