கிருஷ்ணகிரி ஜூன் – 26: போதையில்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில், அண்ணா சிலை எதிரே நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.முருகேசன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.என்.ராமலிங்கம், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் எம்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக உயர்மட்ட குழு உறுப்பினர் பி.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகம் ஆகி இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் இது போன்ற நிலை தொடருமாணால் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சி கள்ளசாராய குடித்த 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, அதை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து ஏராளமான தேமுதிகவினர் கையில் பதாதகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைதலைவர் கே.ஆர்.சின்னராஜ், மாவட்ட பொருளாளர் ஓம்சாந்தி சங்கர், மாவட்ட துணை செயலாளர் எல்.முருகன், வேடியப்பன், மாவட்ட துணை செயலாளர் சதீஷ், சிவகாமி பாலசுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், ஐயப்பன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், கே.பி.ரஞ்சித்குமார், காதர், வேலு, கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய் வல்லரசு, பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கோவிந்தராஜ், மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், மத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஊத்தங்கரை மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேலு, போச்சம்பள்ளி அப்பாபிள்ளை, உள்ளிட்ட ஏராளமான மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



