தென்தாமரைகுளம் ஏப் 5
கொட்டாரம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், அகஸ்தீஸ்வரம் வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் வழக்கறிஞர் என்.தாமரைபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
சிறப்பான முறையில் விழாவை ஏற்பாடு செய்த பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு, முன்னாள் மாணவர்கள் சங்கத்தினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.