டிச. 24
வருகின்ற ஜனவரி 5 ம்தேதி எண்ணங்களின் சங்கமம் (NDSO) அமைப்பின் 20 வது ஆண்டு விழா காங்கேயம் அருகில் பெருமாள் மலையில் உள்ள வள்ளியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக எண்ணங்களின் சங்கமம் NDSO நிறுவன தலைவர் ஜெ.பி அய்யா அவர்கள் வழி நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்களும் ஒன்றினைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது மக்களின் தேவை அறிந்து உணவு உடை மருத்துவம் கல்வி ரத்ததானம் மரக்கன்றுகள் நடுதல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடு கட்டி தருதல் சோலார் விளக்குகள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தேவையான பொருட்கள் பூர்த்தி செய்து கொடுத்தல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எண்ணங்களின் சங்கமம் NDSO தொடர்ந்து 20 ஆண்டு காலமாக செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள திருப்பூரில் இந்த ஆண்டு 20 ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவின் நோக்கம் அனைத்து சமூக ஆர்வலர்களும் ஒன்றினைந்து தமிழகத்தில் வாழும் அனைத்து ஏழை எளிய மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்வதற்கான சந்திப்பு ஆதலால் அனைத்து சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் திறளாக பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம் இவ்வாறு எண்ணங்களின் சங்கமம் NDSO அமைப்பின் கொங்கு மண்டல தலைவர் குளோபல் டாக்டர் மு.பூபதி தெரிவித்தார்.