வேலூர்=24
வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டப்பாளையம் கேரள சமாஜம் அரங்கத்தில் , நடைபெற்ற 43 ஆம் ஆண்டு ஓணம் விழாவில் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், மியூசிக் பேண்ட், மற்றும் நாட்டுப்புற பாடல்கள், ஓணம் விருந்து , ஆகிய நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் , வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார் , கவுன்சிலர்கள் வி.எஸ். முருகன் , வீனஸ் நரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் மேனேஜிங் டிரஸ்டி பி. ராதாகிருஷ்ணன், பொருளாளர் வி. சேது மாதவன், செயலாளர் ரமேஷ் கிருஷ்ணன் ,டிரஸ்டி ஆர். ரஞ்சித் ,மற்றும் விழா குழுவினர்கள் , பொது மக்கள், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.