கம்பம்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரிந்த விலாசம் தெரியாத கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் மனநலம் பாதித்த குர்ஷம்மாள் என்பவர் சுற்றித் திரிகிறார். இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநல பாதித்த ஒரு பெண் சாலையை கடக்க முயன்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்படி தேனி மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு மனநலம் பாதித்த பெண்ணை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



