கன்னியாகுமரி ஜன 22
கன்னியாகுமரி பேரூராட்சியில் பிச்சை எடுப்பவர்கள் இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் பிச்சை எடுப்பவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணியை சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.
இதில் ரோஜா வனம் பாரா மெடிக்கல் கல்லூரி பேராசிரியர் அய்யப்பன், போதை இல்லா தமிழ்நாடு இயக்க ஒருங்கிணைப்பாளர் கலைமாமணி பழனியாபிள்ளை, கன்னியாகுமரி பேரூராட்சி இளநிலை உதவியாளர் சந்திரகுமார், பேரூராட்சி கவுன்சிலர் ஆட்லின் சேகர், மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் எஸ்.அன்பழகன், திமுக 8- வது வார்டு செயலாளர் ரூபின், வேலு, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சின்ன முட்டம் ஷ்யாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.