கன்னியாகுமரி, டிச. 15 –
கன்னியாகுமரி அருகே அஞ்சுகூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜான் (54). தொழிலாளியான இவர் சம்பவ தினம் இரவு சிலுவை நகர் என்ற பகுதிக்கு சென்று விட்டு நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதுகிராமம், மணிரோடு, ஆர் சி சர்ச் அருகே வரும்போது ஜான் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஜான் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சையாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஜான் தம்பி ரஞ்சித் (45) என்பவர் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விபத்தை ஏற்படுத்திய கோட்டார் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


