தென்தாமரைகுளம், டிச. 16 –
வேம்பனூர் அருகே உள்ள சடையில் புதூரை சேர்ந்தவர் ஜெயசேகரன் (50). இவர் சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். தற்போது அகஸ்தீஸ்வரம் பள்ளிக்கூட தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைபார்த்த அவரது மகன், ஜெயசேகரனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு ஜெயசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


