தென் தாமரைகுளம், அக். 23 –
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சாமிதோப்பு அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொதுமக்கள் தங்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை ஒரே இடத்தில் பெறுவதற்கு ஏற்ற வகையில் இன்று அகஸ்தீஸ்வரம் வட்டம் சாமிதோப்பு ஊராட்சிக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் நடைபெற்றது.
ஊராட்சி உதவி இயக்குனர் அன்பு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நீலபாலகிருஷ்ணன், புஷ்பரதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த விஜயன், கரும்பாட்டூர் ஊராட்சி செயலாளர் காளியப்பன், திமுக நிர்வாகிகள் தேவகிருபன், சம்பத், அறிவழகன், மகேந்திரன், சாந்தி நாராயணமணி மற்றும் அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று மனுக்களை பெற்றனர்.



