மார்த்தாண்டம், நவ. 20 –
மார்த்தாண்டம் அருகே கார் மோதி பைக்கில் சென்ற கணவர் மனைவி படுகாயம் அடைந்தனர். சிதறால் அம்பலக் கடை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (44). இவரது மனைவி சுஜித்ரா (37). இவர் தனது கணவர் சதீஷ்யை பைக்கில் பின்னால் அமர வைத்து மார்த்தாண்டத்திலிருந்து ஆற்றூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார்.
மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் முன்பு வந்தபோது
எதிரே வந்த கார் அதி வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து காரை ஓட்டி வந்த கல்குளம் மலையன் குழி பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் முகேஷ் மோகன் (33) மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


