நாகர்கோவில், ஜன. 05 –
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம் நேற்று சுசீந்திரத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலும் இருந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சட்டமன்ற தேர்தல் 2026க்கான கள செயல்பாடுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த முன்னேற்பாடு வேலைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வாக்குச்சாவடி நிலைய முகவர்களுக்கான பயிற்சியும், அறிவுரைகளும் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தின் மூலம் நாம் தமிழர் கட்சி குமரி சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலுக்கான செயற்பாட்டு கணக்கை தொடங்கி உள்ளது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மண்டல செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக 2026 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் மரிய ஜெனிபர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், பாசறை பொறுப்பாளர்களும், கிளை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.



