மார்த்தாண்டம், ஜன. 6 –
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா மார்த்தாண்டம், குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர்.டி. சுரேஷ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பொது செயலாளர்கள் நந்தினி, சுடர் சிங், மாவட்ட செயலாளர் ரெத்தினமணி, ராஜேஷ், ரஜீலா, கிரிஜா, ஸ்ரீகுமார் மாவட்ட துணை தலைவர்கள் மில்டா, இளைஞர் அணி மாவட்ட தலைவர் சுஜின் குமார், மகளிர் மாவட்ட தலைவர் கலா, விவசாய அணி மாவட்ட தலைவர் மனோகர குமார் தன்னார்வலர்கள் தொண்டர்கள் பிரிவு அமைப்பாளர் சேம்குமார் ராதாதங்கராஜ், மனோகரன், கிள்ளியூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சுந்தரபால், குழித்துறை நகர தலைவர் சுமன், பத்மநாபபுரம் நகர தலைவர் கீதா, முஞ்சிறை கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்ரீகண்டன் உட்பட கிளை ஒன்றியம் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பானைகளில் சர்க்கரை, வெண்பொங்கல் போடப்பட்டது. மேலும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



