மார்த்தாண்டம், நவ. 28 –
சென்னை உயர்நீதிமன்றம் கொண்டுவந்துள்ள மின் – தாக்கல் முறை என்ற (இ – பைல்) முறையை கைவிட கேட்டும் பழைய நடைமுறையை தொடர வேண்டும் எனவும் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து வழக்கறிஞர்களும் இன்று கோர்ட்டை புறக்கணித்து கோர்ட் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழித்துறை வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் நீதிமன்றத்தை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்தில் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியதோடு இதனை கைவிட கேட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.



