கன்னியாகுமரி பிப் 23
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச்-1 ம் தேதி அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்க அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம் ஒன்றிய செயலாளர் பா·பாபு தலைமையில் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மார்ச் 1ல் 72 வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவ மனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்ச் 1 ம் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மார்ச் 1ம் தேதி அன்று தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பேரூராட்சி, ஊராட்சி, பகுதிகளிலும் இனிப்புகளும் நலத்திட்டங்களும் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.
மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி சூழலில் தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை தராமல் மீண்டும் இந்தியை திணிக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக தலைமை கழகம் அறிவுறுத்தியபடி அனைத்து பகுதிகளிலும் இல்லங்கள் தோறும் தமிழ் வாழ்க, இந்தி திணிப்பை எதிர்ப்போம் என்று கோலமிட்டும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்பத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு இல்லம் தோறும் வழங்கவும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமரியின் அடையாளமாக உருவாகியுள்ள கண்ணாடி பாலத்திற்கு, தமிழகத்தின் நவனுக்காக தன்னுடைய வாழ்நாளெல்லாம் அயராது உழைத்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டு தீர்மானிக்கப் பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், மெனாண்டஸ், பிரேமலதா, ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ்,
பேரூர் செயலாளர்கள் குமரி ஸ்டீபன், புவியூர் காமராஜ், சுந்தர், மாவட்ட பிரதிநிதி கரும்பை மணி, தமிழ்மாறன், தன சம்பத், கிளை செயலாளர்கள் விஜய கங்காதரன், அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.