களியக்காவிளை, ஜன. 7 –
வெனிசுலா அதிபரை கைது செய்த அமெரிக்காவைக் கண்டித்து களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் மெதுகும்மல் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு வட்டாரக் குழு உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சிதம்பர கிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வட்டாரக் குழு உறுப்பினர்கள் விஜயா, லாரன்ஸ் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். மெதுகும்மல் வட்டார செயலாளர் தங்கமணி போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.
இதில் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார், வினிதா, ரீனா, ரிஷிகுமார், ஜெயன், பெஞ்சமின், ரகீம், சுதேவ், ஸ்ரீனிவாசன், ஆல்பர்ட் கோபகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்ய வேண்டும், அமெரிக்க படைகள் வெனிசுலா நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.



