மார்த்தாண்டம், டிச. 15 –
கன்னியாகுமரி அடுத்த கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ஜான் ரோஸ் மனைவி பிரின்சி (30). இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் மெக்லின் என்ற மகள் உள்ளார். நேற்று பிரின்சி தனது மகளுடன் பைக்கில் மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் – பள்ளியாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த தாய் மகளை அங்கிருந்தவர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து பிரின்சி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் காரை ஒட்டி விபத்து ஏற்படுத்திய நட்டாலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (22) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


