கிருஷ்ணன் கோவில் அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலையுடன் இணைந்து,” மருந்து மற்றும் நோயாளிகள் பாதுகாப்பு “பற்றி கருத்தரங்கு கல்லூரி தலைவர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் என்.வெங்கடேசன் வரவேற்றார். தலைமை விருந்தினர், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை, தலைமை சிவில் மருத்துவர் டாக்டர்.என்.அன்பு வேல் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார்.
சிறப்பு விருந்தினர்கள் பெங்களூர் அல்கான் பார்மாசூட்டிகல்ஸ், மேனேஜர் வி. நாகார்ஜுண ரெட்டி, திருச்சி, காவேரி குரூப் மருத்துவமணை மேனேஜர் டி.சூர்யபிரபா,
விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணை பேராசிரியர், டாக்டர் எக்ஸ்.ஏ.பிரசன்னா ஆகியோர் பேசினர். பேராசிரியர் சடகோபன் நன்றி கூறினார்.