தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டும் என்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கோரிக்கை விடுத்த நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு 864 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து தரப்பு மக்களும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி குட்டியப்பாவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் கடையநல்லூர் நகராட்சி மற்றும் 493 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ 864 கோடி செலவில் 5.6 லட்சம் மக்கள் பயன்படுகிற வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது,
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா சட்டசபையில் கடையநல்லூரில் ஒரு பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்கிறது ஒரு சில பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் கிடைக்காத நிலை உள்ளது, எனவே இதனை வரன்மறை செய்து கடையநல்லூர் நகராட்சி முழுவதும் தாமிரபரணி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் கடையநல்லூர் நகராட்சி மற்றும் 493 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ 864 கோடி செலவில் 5.6 லட்சம் மக்கள் பயன்படுகிற வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனை முன்னிட்டு
கடையநல்லூர் நகராட்சி பகுதி பொதுமக்கள், வர்த்தகர்கள், கட்சி நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பாவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.



