பிப்:28
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி முருங்கப்பாளையம் பகுதி கழகம் 28-வது வார்டு கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சேகர் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர்,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் பொள்ளாச்சி.
ஜெயராமன் பங்கேற்று கழக கொடியினை ஏற்றி வைத்து
,புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் மற்றும் 5000 நபர்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்து. சிறப்புரையாற்றினார்.
முருங்கப்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தன், திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும்,திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என் .விஜயகுமார், தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும்,மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான அன்பகம் திருப்பதி,திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும்,
மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் சின்னச்சாமி, தங்கராஜ், திருமதி.சாந்தி பாலசுப்பிரமணியம், திருமதி. ஆனந்தி தம்பி சுப்பிரமணியம், திருமதி. புஷ்பலதா தங்கவேலன், திருமதி.சகுந்தலா ஈஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சிலம்பரசன் மற்றும் கழக நிர்வாகிகள்,பொதுமக்கள் பங்கேற்றனர்.