தென் தாமரை குளம் பிப் 25
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ் கலந்து கொண்டு கோவிலில் சாமி தரிசனம் செய்து, அன்னதானத்தை தொடங்கி வைத்தார் .
இதில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பொருளாளர் தங்கவேல், பேரூர் செயலாளர்கள் சிவபெருமான், குமார், பெருமாள், முகுந்தன், பாலன், செந்தில் , முத்துகுமார், குமாரவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.