திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வரும் 09 05 2025 வரை மாவட்ட கலால் உதவி ஆணையர் ரவி தலைமையில் நடைபெறுகிறது.
இன்று முதல் நாள் தொடங்கிய ஜமாபந்தி. கிராமங்களில் உள்ள பில்லூர் கொல்லுமாங்குடி, கீரனூர், கூத்தனூர், அன்னதானபுரம், காலியாக்குடி, நெடுங்குளம், முகுந்தனூர், திருக்கொட்டாரம், வேலங்குடி, கடகம், தலையூர், சிறுபுலியூர், பாவட்டக்குடி, போழக்குடி, திருமீயச்சூர் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனுக்களை வழங்கினர்.
இதில் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஜமாபந்தியில் நன்னிலம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் , சரக வருவாய் ஆய்வாளர் தணிக்காசலம், மண்டல துணை தாசில்தார் அசோகன், தலைமையிடத்து துணை தாசில்தார் சிவராமன், வருவாய் கிராம அலுவலர்கள் கௌரிசங்கர், சிவபாலன், பந்த் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.