கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவட்ட ஆட்சியர்
ச.தினேஷ்குமார் ஆணைப்படி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434 வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 16ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்ற முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் ஊத்தங்கரை வட்டாட்சியர் மோகன்தாஸ் முன்னிலையில் மேட்டுத்தாங்கல், ஒன்னகரை, வீராச்சிகுப்பம், வீரனகுப்பம், சந்திரப்பட்டி, ரெட்டிபட்டி, ஆனந்தூர், திருவணப்பட்டி, பெரிய கொட்டகுளம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த கிராம மக்கள் மனுக்களை வழங்கினர். தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு நாளையொட்டி மொத்தம் 855 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 159 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
அப்போது இயற்கை மரண உதவித்தொகை 15 பயனாளிகளுக்கும், உட்பிரிஅல்லாத பட்டா மாற்றம் 12 பயனாளிகளுக்கும், உட்பிரிவு பட்டா மாற்றம் 12 பயனாளிகளுக்கும், புதிய குடும்ப அட்டை 20 பயனாளிகளுக்கும் முதற்கட்டமாக இன்று 59 பயனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் உடனடியாக ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் குமரவேல், வட்ட வழங்கள் அலுவலர் ஜெயபால், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சக்திவேல், துணை வட்டாட்சியர்கள் தனலட்சுமி, சகாதேவன், நாகேந்திரன், வட்ட சார் ஆய்வாளர் கல்பனா, முதுநிலை வருவாய் ஆய்வாளர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர்கள்
45 கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


