மதுரை மார்ச் 17,
முதல்வர் பிறந்த நாளையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இதன்படி, மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இப் போட்டியினை மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி கொடி அசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தார். உடன் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கினார்கள்.