ஆரல்வாய்மொழி, நவ.05:
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பொய்கை அணை அருகே பசுமாடு வாய் சிதறி பரிதாபம் பன்றியை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வைத்த வெடியினால் மாட்டின் வாய் சிதறியதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் மேற்கு மிஷின் காம்பவுண்ட் பகுதியை சார்ந்த பேதுரு என்பவர் மனைவி அன்னம் 63 இவர் தற்போது ஆரல்வாய்மொழி பொய்கை அணை அருகே வீடு கட்டி தனது கணவருடன் குடியிருந்து வருகிறார் இவர்களுக்கு சொந்தமாக பெரிய பசு மாடும் சிறிய கன்று குட்டியும் உள்ளது. இவர்கள் தினமும் காலையில் பசு மாட்டினையும் கன்று குட்டியிணையும் பொய்கை அணை அடிவாரத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம் இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் பசு மாட்டினையும் கன்று குட்டினையும் மேய்ச்சலுக்காக பொய்கையனை அடிவாரத்தில் விட்டுள்ளனர். இதனிடையே பசுமாடானது மாலை நேரமானதும் கன்று குட்டியுடன் வீட்டுக்கு வருவது வழக்கம் ஆனால் நேற்று வெகு நேரம் ஆன பின்பும் மாடு வீட்டுக்கு வராததனால் சந்தேகம் அடைந்த அன்னம் மேய்ச்சலுக்கு விட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் செல்கின்ற ஓடையில் மாடானது வாய் பகுதி முற்றிலும் சிதறிய நிலையில் வடுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னம் இது சம்பந்தமாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பசுமாடு படுகாயமடைந்து கிடந்த பகுதியானது மலை அடிவாரப் பகுதி என்பதால் இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் மற்றும் மிளா போன்ற வன விலங்குகள் வருவதால் அதனை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் கன்னிவெடி வைத்திருக்கலாம் எனவும் அப்போது மேச்சலுக்கு நின்ற பசுமாடு அதனை அருந்துகின்ற பொழுது கன்னிவெடி வெடித்து பசுமாட்டின் வாய் பகுதி முற்றிலும் சிதறி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுகின்ற மர்ம கும்பல்கள் அதிகரித்து உள்ளதாகவும் ஏற்கனவே பூதப்பாண்டி அருகே வேட்டையாடுவதற்காக கொண்டு சென்ற கன்னிவெடி வெடித்து ஒருவர் இறந்த சம்பவமும் காட்டுப்பன்றி வாய் சிதறி இறந்த சம்பவமும் நடந்த சூழ்நிலையில் தற்போது ஆரல்வாய்மொழி பொய்கை அருகே கன்னிவெடி வெடித்து பசுமாட்டின் வாய் பகுதி முற்றிலும் சிதறிய பரிதாப சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது