உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க உடன்பிறப்புகளுக்குமாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை அழைப்பு –
பூதப்பாண்டி -ஏப்ரல் 19 –
உணவு ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும்முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் இன்று குமரிக்கு வருகிறார்அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை தன் அறிக்கை மூலம் அழைக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக மாவட்டத்தில் கால் நூற்றாண்டு காலம் மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து கழகத் தோழர்களை தாய் உள்ளத்துடன் அரவணைத்து கழகத்தை வளர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கழகம்,கூட்டணி கட்சிகள் வென்றெடுத்ததோடு பத்தாண்டு காலம் அமைச்சராக பொறுப்பேற்று திறன் பட செயல்பட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் அவர்களை தமிழ்நாடு அரசின் உணவு ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளார்கள். அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் மற்றும் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று சென்னை எழிலகத்தில் உணவு ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று கழகத்தின் முன்னணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்று இன்று மாலை 4 மணிக்கு வடசேரி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவர், முன்னாள் அமைச்சர் அண்ணன் சுரேஷ்ராஜன் அவர்களை வரவேற்க கழக உடன்பிறப்புகளாய் ஒன்றிணைந்து சிறப்பான வரவேற்பு அளிப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



