தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட விதவை உதவித்தொகை 5 ஆண்டு க்குப் பிறகு மீட்பு
உரியவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஒப்படைத்தார்
தஞ்சாவூர். அக்.27
தவறுதலாக வேறு ஒருவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட விதவை பெண்ணின் உதவித் தொகை 5ஆண்டுகளுக்குப் பிறகு மீட்கப்பட்டு உரியவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஒப்படைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் கனரம்பட்டி
கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ் இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி புஷ்பராணி கணவர் இறப்பிற்கு வழங்கப்பட்ட நிலுவைத் தொகை மற்றும் விதவை உதவித்தொகை ரூபாய் 32,500. இந்த உதவி தொகை புஷ்ப ராணியின் வங்கிக் கணக்கில் ஏறாமல் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேறொரு நபரின் வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப் பட்டு விட்டது.
இதையடுத்து இந்த பணத்தை மீட்டு தருமாறு புஷ்பராணி கோரிக்கை விடுத்தார். ஐந்து ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்சனை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக தொகை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க வலியுறுத்தினார்
அதன்படி தவறுதலாக செலுத்தப் பட்ட வங்கி கணக்கின் உரிமை
யாளரிடம் இருந்து ரூபாய் 32,500 மீட்டு புஷ்பராணியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஒப்படைத்தார். அப்போது சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர் சங்கர் உடன் இருந்தார்.