திருமங்கலம் நகர் பகுதியில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்பாட்டின் பேரின் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான ஐயப்பன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக திருமங்கலம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த
எம்எல்ஏ. ஐயப்பனிடம் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்தை கேட்காமல் தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்த செய்தியாளர்கள் கேள்விஎழுப்பியபோது அதற்கு பதில் அளித்த ஐயப்பன் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓபிஎஸ் இன் சுண்டுவிரல் அசைக்காமல் யாரும் இரட்டை இலை சின்னத்தை பெற முடியாது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி நல்ல தீர்ப்பை வழங்கி உள்ளது. விரைவில் ஓபிஎஸ் தலைமையில் இரட்டை இலை சின்னத்தை பெற்று அனைவரையும் ஒருங்கிணைத்து 2026 தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஓபிஎஸ் முதல்வர் ஆவார் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன்,
நகரச் செயலாளர் ராஜாமணி,
இணை செயலாளர் விஜயபாண்டி அம்மா பேரவை நகரச் செயலாளர் முத்துக்குமார் அவை தலைவர் காளிதாஸ் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் பட்டர் கணபதி உட்பட பலர் உடனிருந்தனர்.