ஸ்ரீவில்லிபுத்தூர்: ஜீன்:23
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம்பல்கலையில் சர்வதேச யோகா தினம் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் எஸ்.சசிஆனந்த், துணைவேந்தர் எஸ்.நாராயணன். பதிவாளர் வி.வாசுதேவன் கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தனர். மாணவர் நலத்துறை இயக்குநர் ஏ.சாம்சன் நேசராஜ், வரவேற்றார். யோகா பயிற்சியாளர்கள் கு.ஜெயந்தி,அ.சரவணன்,சே.பாண்டியராஜ், ச.ஜெயந்தி 25 வகை பயிற்சிகளை செய்து வழி நடத்தினர். ஆசிரியர்கள்,மாணவர்கள்,அலுவலர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். என்.எஸ்.எஸ் அதிகாரிகள் ராஜபிரதிஷ், தினேஷ்குமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். சுரேஷ்குமார் நன்றி கூறினார்



