திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா மற்றும் கல்வி, விளையாட்டு விருது வழங்கும் விழா.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா,கல்வி மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn. P.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் Rtn.M.செல்வகனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவராக பள்ளி மாணவி P.தனுசியா, செயலாளராக பள்ளி மாணவன் R.ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளர் கலைச்செல்வன், ரோட்டரி சங்கத்தின் உறுப்பினர்கள் Rtn.D.ரெங்கையா, Rtn.சேவியர், பள்ளி தலைமை ஆசிரியர் T.கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் S.பாலமுருகன் நன்றி கூறினார்.