சென்னை வேளச்சேரி
நெடுஞ்சாலைத்துறை வேளச்சேரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட தரமணி பெருங்குடி மடிப்பாக்கம் வேளச்சேரி பள்ளிக்கரணை, வேளச்சேரி மடிப்பாக்கம் சாலைகள் மற்றும் தில்லை கங்கா நகர், மவுண்ட் மீனம்பாக்கம் போன்ற சுரங்கப்பாதைகள் ஃபெஜ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் தலைமை பொறியாளர் (நெ )(க)(ம)ப துறை அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க புயல் மற்றும் பருவமழை காலங்களில் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறின்றி சாலை பராமரிப்பு பணிகள் இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகிறது.