திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா,கல்வி மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் ரோட்டரியன் ஹெச்.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் ரோட்டரியன்.பி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரியன்.என்.அர்த்தனாரி, பள்ளியின் தலைமை ஆசிரியை டிஎம்ஒய். சத்யா என். குணசீலி ஜெ, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் ரோட்டரியன்.எம்.செல்வகனி, இன்ட்ராக்ட் கிளப் சேர்மன் ரோட்டரியன் டாக்டர் எம். சிவராமன்
மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி
ரோட்டரியன். இருதயராஜா, ரோட்டரியன். பி. செந்தில்குமார். டி.ரெங்கையா,ரோட்டரியன்.
மதன்மோகன்,
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவராக பள்ளி மாணவர் எஸ்.குருதர்ஷன், செயலாளராக பள்ளி மாணவர் பி.அஸ்வந்த் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளியின் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு
ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் மதனராஜ் நன்றி கூறினார்.