திண்டுக்கல் மே:27
திண்டுக்கல் உதயம் லயன்ஸ் சங்கம் மற்றும் தோமா அருள்பணி மையம் ஆகியோர் இணைந்து தமிழ்ப் படிப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி திண்டுக்கல் புனித வளனார் பேராலய வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உதயம் லயன்ஸ் சங்க செயலாளர் லயன். டாக்டர். எஸ்.லலிதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு உதயம் லயன்ஸ் சங்க பொருளாளர் லயன். எஸ். இசக்கிமுத்து முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் லயன். பொறியாளர் கிரியேட்டிவ்
பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் லயன்.வி. ராஜா, வட்டாரத் தலைவர் லயன்.எ.குமார், திண்டுக்கல் வாசிப்பு இயக்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மைய நூலக தலைவர் தமிழ்ச் செம்மல் தியாகராஜன், அமைப்பற்ற மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நல்வாழ்வு சங்கம், திண்டுக்கல் தோமா
அருள்பணி மையத்தின் தலைவர் பங்குத்தந்தை சோ.பிலிப் சுதாகர் ஆகியோர் கலந்து
கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிகளை முன்னாள் மண்டல தலைவர் லயன். பொறியாளர் நல்.நாகராஜன் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் புறநகர் பகுதியில் உள்ள அனேக லயன்ஸ் சங்கத்தின் உடைய தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் வந்திருந்த அனைவருக்கும் நினைவு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.